மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 148 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோட்டைப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 148 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டைப்பட்டினம்:
புகையிலை பொருட்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட சிறப்பு ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து அவா்கள் கோட்டைப்பட்டினம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்ேபாது பெரிய மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
இதைப்பார்த்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது, அதில் தடை செய்யப்பட்ட 148 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ேமாட்டார் சைக்கிள் மற்றும் 2 பேரையும் கைது செய்து கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தியதில், புகையிலை பொருட்களை கடத்தி வந்தது, கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜகுபர் மகன் முகமது இத்ரீஸ் (வயது 38) மற்றும் நைனா முகமது மகன் சாகுல் ஹமீது (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இத்ரீஸ் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாகுல் ஹமீதுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.