15-ந்தேதி ஜல்லிக்கட்டு


15-ந்தேதி ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:30 AM IST (Updated: 11 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

புகையிலைபட்டியில் வருகிற 15-ந்தேதி ஜல்லிகட்டு போட்டி நடக்கிறது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள புகையிலைபட்டியில் ஒவ்வொரு ஆண்டும் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 13-ந்தேதி திருவிழா பொங்கல் வைத்தலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து சப்பர ஊர்வலங்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான வாடிவாசல், கேலரி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை புகையிலைபட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story