வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்


வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்
x

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்கள் வேனில் விருகாவூர் பகுதியில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துபற்றிய தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி கவுன்சிலர் டேனியல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story