மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தரெயிலில் கடத்திய 15 கிலோ புகையிலை பறிமுதல்
மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் கடத்திய 15 கிலோ புகையிலை பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் கடத்திய 15 கிலோ புகையிலை பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தி வந்த நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போதை பொருட்கள்
தமிழகம் முழுவதும் போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்வதோடு அவர்களின் வங்கி கணக்கையும் முடக்கி வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 130 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக விற்பனையாகும் போதை பொருட்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைந்தது. இதைத் தொடர்ந்து ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் சோதனை
இந்த நிலையில் மங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கியதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் ரெயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலில் முன்பதிவு அல்லாத பெட்டியில் இருக்கைக்கு அடியில் சந்தேகப்படும் வகையில் ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கை போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் பாக்கெட் பாக்கெட்டாக புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை யாரோ மர்ம ஆசாமி வெளி மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த மர்ம ஆசாமி யார்? என்ற விவரம் தெரியவில்லை.
புகையிலை பறிமுதல்
இதைத் தொடர்ந்து பேக்கில் இருந்த 14 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.