15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:51 AM IST (Updated: 14 Feb 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தஞ்சாவூர்

பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளதா? என செயல் அலுவலர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வணிக வளாகம், மளிகை கடை, மருந்து கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பயன்பாட்டில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story