கதண்டு கடித்து 15 பேர் காயம்


கதண்டு கடித்து 15 பேர் காயம்
x

கதண்டு கடித்து 15 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உகந்தநாயகன் குடிக்காடு கிராமத்தில் பூலாங்குளம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் உள்ள ஆலமரத்தில் கதண்டுகள் கூடுகட்டி இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென படையெடுத்து வந்த கதண்டுகள் கிராமத்தில் இருந்த 15 பேரை கடித்தது. அவர்கள் அனைவரும் உடனடியாக செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.


Next Story