சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 15 ேபர் காயம்


வேலங்காட்டில் நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

வேலூர்

அணைக்கட்டு, ஜன.22-

வேலங்காட்டில் நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

காளைவிடும் விழா

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராமத்தில் தைஅமாவாசையை முன்னிட்டு 56-ம்ஆண்டாக காளை விடும் விழா நேற்று நடந்தது. இதில் களம் இறக்குவதற்காக சுற்றுபுறப்பகுதிகளிலிருந்து 205-காளைகள் கொண்டு வரப்பட்டன

பொய்கை கால்நடை மருத்துவர் லாவண்யா தலைமையிலான குழுவினர் பரிசோதித்து 165 காளைகளுக்கு அனுமதி வழங்கினர்.அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் மற்றும் துணைத் தாசில்தார் குமார் ராமலிங்கம் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் நாட்டாண்மை மேட்டுக்குடி உள்ளிட்டோர் உறுதிமொழியை ஏற்று காளை விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனை பார்க்க உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து குவிந்தனர். அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மீதும் தண்ணீர் தொட்டிகள் மீதும் மரங்கள் மீதும் ஏறி அமர்ந்து பார்த்தனர்.

சீறிப்பாய்ந்து ஓடின

காளை விடும் விழா தொடங்கப்பட்டதும் வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. இதனை ஏராளமானோர் பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.

அப்போது சீறிப்பாய்ந்து காளைகள் தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை தூக்கி பந்தாடியது. இதில் 15-க்கு மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

அவர்களுக்கு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபிகா வட்டார மருத்துவ மேற்பார்வையாளர், மருத்துவ ஆய்வாளர் உமா ஆகியோர் கொண்ட குழு சிகிச்சைகள் வழங்கினர்.

காளை முட்டியதில் வேலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 5 அடி உயரத்துக்கு தூக்கி வீவசப்பட்டு படுகாயம் அடைந்ததில் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் ஒரு காளை அதிவேகமாக ஓடி தடுப்பு கம்பு மீது மோதி காயம் அடைந்தது.

வருவாய்த்துறையினர் விழா நடப்பதை கண்காணித்தனர். கட்டுக்கடங்காத இளைஞர்களை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விழாவை பார்வையிட்டனர்.

பரிசுகள்

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 41 பரிசுகளை விழாக்குழுவினர் அறிவித்திருந்தனர். முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசு 50 ஆயிரத்து 555ஆயிரம், மூன்றாவது பரிசு 40 ஆயிரத்து 444 வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை வேலங்காடு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story