சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 15 பாலங்கள்


சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 15 பாலங்கள்
x

விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து நேரடியாக செல்லும் விதமாக சென்னை விமான நிலையத்தில் ‘பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்’ என்ற அதிநவீன பாலங்கள் தயாராகி வருகின்றன.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு நவீன முனையத்தில் விமானங்களில் பயணிகள் ஏறி செல்லவும், இறங்குவதற்காகவும் 'பேசன்ஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்' என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ் விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் விதமாக அமைக்கப்படுகின்றன. இந்த 15 பாலங்களில் 7 பாலங்கள் 47 மீட்டா்கள் நீளமுடையவையாகவும், 7 பாலங்கள் 32 மீட்டரில் இருந்து 40 மீட்டா்கள் கொண்டதாகவும், மற்றொரு பாலம் 32 மீட்டா் நீளம் உடையதாகவும் அமைய உள்ளது. முதல் கட்டத்தில் 47 மீட்டா் நீளமுடைய 7 பாலங்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

டிசம்பர் மாதம்பயன்பாட்டுக்கு...

மேலும், இந்த நவீன இணைப்பு பாலத்தில் நகரும் பாலங்கள் இரண்டு அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டா் கொண்ட 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

மற்ற 8 பாலங்கள் அடுத்த 2-வது கட்டத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த பாலங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதை போன்ற நவீன பாலங்கள் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றன. நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story