15 டன் ரேஷன் அரிசி, வாகனங்களுடன் பறிமுதல்


15 டன் ரேஷன் அரிசி, வாகனங்களுடன் பறிமுதல்
x

குடியாத்தம் அருகே 15 டன் ரேஷன் அரிசி, வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

குடியாத்தம்

பள்ளிகொண்டா-ஆம்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அகரம்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் இரவில் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி கடத்தப்பட இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் லலிதா, குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று இரவு சம்பந்தப்பட்ட பார்க்கிங் பகுதிக்கு சென்றனர். வருவாய்த்துறையினரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கு சரக்கு ஆட்டோ, மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றி வரப்பட்டு ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு பெரிய லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உதவி கலெக்டர் தனஞ்செயன் பெரிய லாரி உள்பட வாகனங்களை ரேஷன் அரிசியோடு பறிமுதல் செய்து பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி 15 டன் இருக்கும் என கூறப்படுகிறது.களுடன் பறிமுதல்


Next Story