கர்நாடகாவுக்கு மினிலாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கர்நாடகாவுக்கு மினிலாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

உளுந்தூர்பேட்டை அருகே கர்நாடகாவுக்கு மினிலாரியில் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே திருநருங்குன்றம் பகுதியில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் நின்ற மினி லாரி ஒன்றை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ய சென்றனர். அப்போது அதில் இருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் மினிலாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த மினிலாரியை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிராம புறங்களில் உள்ள மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

வலைவீச்சு

இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தப்பிச்சென்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story