எருது விடும் விழாவில் 150 காளைகள் பங்கேற்பு


எருது விடும் விழாவில் 150 காளைகள் பங்கேற்பு
x

பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடந்தஎருது விடும் விழாவில் 150 காளைகள் பங்கேற்று ஓடின.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த பாலாத்துவண்ணான் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கணியம்பாடி ஒன்றியக் குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் பூமா, ஒன்றிய கவுன்சிலர் தங்கம்மாள்கோவிந்தன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்திதுரைக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா வரவேற்றார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 150 காளைகள் பங்கேற்றன. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைத்து, சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தது. காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

சீறிப் பாய்ந்தது ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். அப்போது மாடுகள் முட்டியதில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.55 ஆயிரம் என மொத்தம் 101 பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story