150 குரோஸ் கருந்திரி பறிமுதல்


150 குரோஸ் கருந்திரி பறிமுதல்
x

அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 150 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்து பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட 150 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்து பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

அருப்புக்கோட்டை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு, குரோஸ் கருந்திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதை யடுத்து அருப்புக்கோட்டை டவுன் சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் ஆகியோர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோதிடம் வீரப்பன் தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது57), உஜ்ஜிசாமி கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (53) ஆகியோர் தங்களது வீடுகள் முன்பு அனுமதியின்றி எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 100 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர்.

பெண் கைது

அதேபோல் தெற்குத்தெருவில் சப்-இன்ஸ்பெக்டர் உமாமாலினி ரோந்துபணியில் ஈடுபட்டார்.

அப்போது அமுதா (48) என்பவர் தனது வீட்டின் முன்பு கருந்திரிகள் வைத்திருந்ததாக அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தார்.


Next Story