வீட்டில் பதுக்கிய 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே வீட்டில் பதுக்கிய 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து வன காவல் நிலைய வனச்சரகர் சதீஷ்குமார் மற்றும் மண்டபம் வனச்சரக அதிகாரி மகேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் வேதாளை சென்று அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்கு மூடை மற்றும் பிளாஸ்டிக் கேன் ஒன்றில் இருந்த சுமார் 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த கடல் அட்டைகளை பதுக்கி வைத்த நபர் யார்? என்பது குறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வேதாளை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடல் அட்டைகளுடன் சென்ற வாகனத்தை மறித்து பிடிக்க சென்ற கடலோர போலீசார் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story