150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சுரண்டை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி
சுரண்டை:
சுரண்டை அருகே மரியதாய்புரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சுரண்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் அங்கு சென்றனர். அங்கு மரியதாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணி வியாகப்பன் மகன் அந்தோணி செல்வம் (வயது 43) என்பவரது குடோனை சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தோணி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 கிலோ புகையிலை பொருட்கள், ஒரு மொபட், ரூ.23 ஆயிரம் ஆகியவற்றை சுரண்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story