1500 கிலோ புகையிலை பறிமுதல்; 4 பேர் கைது
திருப்பத்தூர் அருகே புகையிலை பொருட்களை வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் ஒரு கார், 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே புகையிலை பொருட்களை வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் ஒரு கார், 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள்
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று மானகிரி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மானகிரி பகுதியில் காளையார்கோவில் கோலாந்தியை சேர்ந்த சுரேஷ்(வயது38) என்பவர் வாடகை வீட்டில் சுமார் 1,500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த இளையான்குடி சாலிகிராம பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (29), காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25), வினோத் கண்ணன் (32) மற்றும் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் பெனசீர்கான் (33) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1,450 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் மற்றும் அதை விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.