வடலூர் சத்திய தருமச்சாலையின் 157-ம் ஆண்டு தொடக்க விழா


வடலூர் சத்திய தருமச்சாலையின் 157-ம் ஆண்டு தொடக்க விழா
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடலூர் சத்திய தருமச்சாலையின் 157-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

கடலூர்

வடலூர்,

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலையின் 157- ஆண்டு தொடக்க விழா மற்றும் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7 நாட்களாக அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் மற்றும் அருட்பா முற்றோதல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தருமச்சாலை மேடையில் திருவருட்பா இன்னிசை நாடகமும், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றன.

நேற்று அதிகாலை 5 மணி முதல் பாராயணமும் 7.30 மணியளவில் தருமச்சாலை சன்மார்க்க கொடி உயர்த்துதலும், காலை 9 மணி முதல் 11 மணி வரை நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினர்களின் வில்லு பாட்டும், திருக்கோவிலூர் சீனிவாசனின் திரு அருட்பா இன்னிசை நிகழ்ச்சியும், 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரமும், 12 மணி முதல் தருமச்சாலை மேடையில் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் முன்னிலையில் சன்மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடந்தது. விழாவில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் நந்தகோபால் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஞானசபை மற்றும் தருமச்சாலை ஆகிய இடங்களில் பலவகையான மலர்கள், பழங்கள் படையலிட்டு சிறப்பு வழிபாடும் நடந்தது. தெய்வநிலையத்துடன் இணைந்து உபயதாரர்கள் அறுசுவையுடன் தொடர் அன்னதானம் வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையத்தினர் செய்திருந்தனர்.


Next Story