பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி பகுதிகளில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ச்சம்பட்டி தனியார் பால்பண்ணை மற்றும் சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 53), பெரியசாமி (58), ராமமூர்த்தி (52), குருசாமி (47), கோவிந்தராஜ் (46), ஜெயக்குமார் (65), சையது முஸ்தபா (52, சாமிநாதன் (49), வெங்கடேசன் (52), முத்துக்கண்ணு (43), கருப்பையா (52), சிவராஜ் (52), மணிசங்கர் (50), சங்கர் (60), ஞானசேகர் (36), கோபாலகிருஷ்ணன் (47) ஆகிய 16 பேரை போலீசார் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.22 ஆயிரத்து 380 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story