மளிகை கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
மளிகை கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
மளிகை கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டையில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் பழனி தலைமையில் தடை செய்ப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கேசவன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் புது ஓட்டல் தெரு மற்றும் வாணியம்பாடி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் ஈடுபட்டனர்.
அப்போது 3 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து 16 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர் அதன் பிறகு ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.பிளாஸ்டிக் பைகளை தடையை மீறி மீண்டும் விற்பனை செய்தால் கடைகளுக்கு 'சீல்' வைத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உரிமையாளர்களை அவர்கள் எச்சரித்தனர்.