காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம்


காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம்
x

திருப்பத்தூர் அருகே காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள வக்கீல் ஐயர்தோப்பு பகுதியில் நடந்த காளை விடும் விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

விழாவையொட்டி காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்கள், காளைகளை பரிசோதனை செய்தனர். விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் கே.சி.கோவிந்தராஜ், பி.ரத்தினவேல், தர்மகர்த்தா வி.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.சரவணன், கே.ஜெய்சங்கரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. காளை விடும் விழாவை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் லேசான காயம் அடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், எருது விடும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story