16 பன்றிகள் விஷ ஊசி செலுத்தி கொன்று புதைப்பு
அணைக்கட்டு அருகே அரிய வகை காய்ச்சல் பாதித்ததால் 16 வெள்ளை பன்றிகளை விஷ ஊசி செலுத்தி கொன்று புதைத்தனர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே அரிய வகை காய்ச்சல் பாதித்ததால் 16 வெள்ளை பன்றிகளை விஷ ஊசி செலுத்தி கொன்று புதைத்தனர்.
காய்ச்சலால் பாதிப்பு
அணைக்கட்டு அடுத்த ஊணை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை பன்றிகள் வளர்க்கும் பண்ணை நடத்தி வருகிறார்.
பண்ணையில் இரண்டு தாய் பன்றிகள், 14 குட்டிகள் என மொத்தம் 16 பன்றிகளை பண்ணையில் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பன்றிகள் புதுவித நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆறுமுகம், அணைக்கட்டு கால்நடை மருத்துவரிடம் கூறியுள்ளார். அதன்பேரில் கால்நடை மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பன்றிகளை பரிசோதனை செய்தனர். அதில் வெள்ளை பன்றிகளுக்கு 'அப்ரிசியன் பைன்' என்கிற அரியவகை காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
கொன்று புதைப்பு
மேலும் இந்த காய்ச்சலுக்கு தடுப்பு ஊசி இல்லாததால் கால்நடை மருத்துவர்கள், காய்ச்சல் பாதித்த வெள்ளை பன்றிகளை எக்காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என்று பண்ணை உரிமையாளர் ஆறுமுகத்திடம் எச்சரித்தனர்.
மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெள்ளை பன்றிகளை விஷ ஊசி செலுத்தி கருணை கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை துறையினர் ஆலோசனை நடத்தி வருவாய்த் துறையினர் முன்னிலையில,் கால்நடைத்துறை துணை இயக்குனர் அந்துவன் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள், 16 பன்றிகளுக்கு விஷ ஊசி செலுத்தினர்.
இதனால் சிறிது நேரத்தில் 16 பன்றிகளும் இறந்தன. அதைத்தொடர்ந்து சுமார் 10 அடி ஆழம் குழி தோண்டி பன்றிகளை புதைத்தனர்.