163 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


163 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல்போன 163 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல்போன 163 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

163 செல்போன்கள் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் திருட்டு போனதாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் விவரங்கள் சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 163 செல்போன்களை கண்டுபிடித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி செல்போன்களை தவறவிட்ட 163 நபர்களை வரவழைத்து அவர்களிடம் செல்போன்களை் ஒப்படைத்தார்.

சட்டப்படி குற்றம்

பின்னர் அவர் பேசுகையில் திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுவது சம்பந்தமாக தகவல் கிடைத்தால் உடனடியாக அருகாமையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 9442992526 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருப்பத்தூர் கணேஷ், வாணியம்பாடி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் சரவணன், ஆயுதப்படை விநாயகம், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரேமா, இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஜோலார்பேட்டை தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story