ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை தேர்வை 1,644 பேர் எழுதினர்


ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை தேர்வை 1,644 பேர் எழுதினர்
x

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை தேர்வை 1,644 பேர் எழுதினர்.

திருச்சி

11 தேர்வு மையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய போட்டித் தேர்வு நேற்று திருச்சி மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 3,112 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத வந்தவர்களுக்கு முதலில் சுகாதார பணியாளர்கள் மூலம் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.

பின்னர் தேர்வு அறைக்குள் தேர்வர்களை காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு மேல் வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வர்களை மட்டும் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.

1,644 பேர் எழுதினர்

இதையடுத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2-ம் தாள் தேர்வும் நடந்தது. இந்த தேர்வுக்கு திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 3,112 பேரில் 1,644 பேர் தேர்வு எழுதினர். 1,468 பேர் தேர்வு எழுத வரவில்லை. இது 47.17 சதவீதமாகும்.

ேதர்வு மையங்களை சப்-கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலர்கள் கண்காணித்தனர். மேலும் இயங்க குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர்.


Next Story