மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை 1,678 பேர் எழுதினர்
மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை 1,678 பேர் எழுதினர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு ஆகியவற்றை நேற்று நடத்தியது. இந்த தேர்வு திருச்சியில் 3 மையங்களில் நேற்று நடைபெற்றது. திருச்சி வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வை எழுத 698 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 12 முதல் 2 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் என 3 பிரிவுகளாக நடந்த இந்த தேர்வை 337 பேர் கலந்து கொண்டு எழுதினர்.
தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி தேர்வு திருச்சி செயின்ட் ஜான் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் என்று 2 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 1,286 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் காலையில் 493 பேரும், மாலையில் 487 பேரும் தேர்வை எழுதினர்.