17 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை


17 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

குறைந்தபட்ச கூலி சட்டத்தை பின்பற்றாத 17 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் கூறினார்.

விருதுநகர்


குறைந்தபட்ச கூலி சட்டத்தை பின்பற்றாத 17 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் கூறினார்.

குறைந்த சம்பளம்

விருதுநகர் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டம்1948-ன்கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது 17 நிறுவனங்கள் மீது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் நிறுவனங்களின் மீது கேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு 17 நிறுவனங்களில் பணி புரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் ரூ. 9 லட்சத்து 56 ஆயிரத்து 58- ஏற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். ஊதியம் குறைவு தொடர்பான குறைகள் இருந்தால் 04562-225130 என்ற எண்ணை விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சிறப்பு ஆய்வு

மேலும் சிறப்பு ஆய்வினை விருதுநகர் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் கூறினார்.


Next Story