அய்யலூரில் இந்து முன்னணியினர் 17 பேர் கைது
அய்யலூரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து வடமதுரை நோக்கி தேசிய கொடியுடன் இந்து முன்னணியினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது.தேசிய கொடியை மட்டும் ஏற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர். ஆனால் அதை மீறி அவர்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். இதனையடுத்து இந்து முன்னணியினர் 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story