மக்கள் தொடர்பு முகாமில் ரூ.17 ½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு முகாமில் ரூ.17 ½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ.17.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி,பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ.17.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி,பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

மக்கள் தொடர்பு முகாம்

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்துத் துறை அலுவலர்கள் மூலம் மனுவாக பெறப்பட்டன. பொது மக்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் நீர்வள ஆதார துறையின் மூலம் 8.06 கோடி செலவில் 750 கி.மீ. தூரம் சிறப்பாக தூர்வாரப்பட்டன. ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 1138 கி.மீ. தூரம் தூர்வாரப்பட்டன. இதன்மூலம், கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. குறுவை சாகுபடி திட்டத்தில் நமது மாவட்டத்தில் 55,000 ஏக்கர் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஸ், காம்ப்ளக்ஸ் போதிய இருப்பு உள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் 1000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நலத்திட்ட உதவிகள்

கடந்த ஆண்டு ரூ.500 கோடி அளவிற்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் திருமண உதவித்தொகை, இறப்பு நிவாரணம், முதியோர் மற்றும் இதர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, இலவச வீட்டுமனை பட்டா வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் இடுபொருட்கள் என மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ.17,53.280 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் இவ்வாறு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்ச்செல்வன்,வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை கலெக்டர் கண்மணி, குத்தாலம் தாசில்தார் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன்,உமாசங்கர்,ஒன்றிய குழு உறுப்பினர் ராகவமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் லெட்சுமி,மோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story