பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.33 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
ஆலங்குடி செட்டி குளக்கரை அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் சூதாடிக்கொண்டு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து, ஆலங்குடி அண்ணா நகரை சேர்ந்த சங்கர் (வயது 32), கறம்பக்குடியை சேர்ந்த குப்புசாமி (37), கந்தர்வகோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (45), கீரனூரை சேர்ந்த ஆறுமுகம் (42) உள்பட 17 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 16 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.33 ஆயிரத்து 300 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story