மதுவிற்ற 17 பேர் கைது
நாமக்கல், பரமத்திவேலூரில் மதுவிற்ற 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காந்திஜெயந்தியையொட்டி நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதை மீறி மாவட்டத்தில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டு இருந்தார்.
அவரது உத்தரவின் பேரில் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்த கணபதி (வயது 30), வெங்கடேஷ் (50), ஹரீஸ் (22), அஜித்குமார் (22), கருப்பையா (45), சபரிநாதன் (42), மணிகண்டன் (30), கணேசன் (35) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் அந்த பகுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள குமரவேல்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (48), புதுச்சத்திரம் அருகே ஏழூர்புதுப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (62), பொம்மம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி (42), வேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்த குமரவேல் (40), வெங்கரை அண்ணாநகரைச் சேர்ந்த லட்சுமணன் (27), ஜேடர்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் (37), எஸ்.வாழவந்தி அருகே உள்ள வள்ளியப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (47), பரமத்தியைச் சேர்ந்த விஜயகுமார் (27), வேலாண்டிபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் (36) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தனர்.