காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 17 பேர் காயம்


காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 17 பேர் காயம்
x

கே.வி.குப்பம் அருகே நடந்த காளைவிடும் விழாவில் மாடுகள் முட்டி 17 பேர் காயம் அடைந்தனர்.

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங் களில் இருந்து 180 மாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 165 காளைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் தாமோரவி, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றதைத் தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

காளைகள் ஓடும் வழியில் வாலிபர்கள் வழிமறித்து நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது மாடுகள் முட்டியதில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 2 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல 15 மாடுகளுக்கும் காயம் ஏற்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் பரிசு ரூ.70 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.60 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் உள்பட மொத்தம் 67 பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story