17 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்கள்
கும்பகோணத்தில் 17 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர்களை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தஞ்சாவூர்
கும்பகோணம்:
,கும்பகோணத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழச்சிக்கு அனபழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன் முன்னிலை வகித்தார். இதில் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பித்த 17 விவசாயிகளுக்கு மானிய விலையில் 17 பவர் டில்லர்களை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார். கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துசெல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், கும்பகோணம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் எழிலன், இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
---
Related Tags :
Next Story