17 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் மீது வழக்கு
மார்த்தாண்டத்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு, நெல்லை மாவட்டத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். அதன்பிறகு அந்த சிறுமி மேடைகளில் நடனம் ஆடும் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சிகளில் கொட்டு வாத்தியம் இசைத்து வந்த இரணியல் பகுதியை சேர்ந்த அபினேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அபினேஷ் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி குற்றாலத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியிடம் பேசாமல் இருந்து வந்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அபினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.