தமிழ்நாட்டில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 3,796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,97,118 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கும், செங்கல்பட்டில் 17 பேருக்கும், கோயம்புத்தூரில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 909 ஆக உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது