பஸ்கள் மோதல் 18 பக்தர்கள் காயம்


பஸ்கள் மோதல் 18 பக்தர்கள் காயம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே பஸ்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 18 பக்தர்கள் காயம் அடைந்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மேல்மருவத்தூருக்கு...

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண் பக்தர்கள் நேற்று காலை 2 பஸ்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு புறப்பட்டனர்.

வழியில் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அதன்படி 2 பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது.

18 பேர் காயம்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற பஸ் வேகத்தடையில் ஏறி இறங்கியது. அந்த சமயத்தில் பின்னால் வந்த மற்றொரு பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்மீது மோதியது. இதில் முன்னால் சென்ற பஸ்சின் பின்பகுதியும், பின்னால் வந்த பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தன.

மேலும் இந்த விபத்தில் அம்மம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் மனைவி சத்யா (வயது 30), மாரிமுத்து மனைவி ஜெயந்தி(40), மணிமாறன் மனைவி வித்யா (32), நாராயணசாமி மனைவி கலைராணி, பெருமாள் மனைவி சின்னபொண்ணு, கருணாநிதி மனைவி செல்லம்மாள் உள்ளிட்ட 18 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story