காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் 18,026 மாணவ-மாணவிகள் பயன்


காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் 18,026 மாணவ-மாணவிகள் பயன்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் 18,026 மாணவ-மாணவிகள் பயன்

நாகப்பட்டினம்

தமிழக அரசின் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் முதலில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாகை மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியை சேர்ந்த 9,075 மாணவர்கள், 8,951 மாணவிகள் என மொத்தம் 18,026 மாணவ- மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து உள்ளனர்.


Next Story