காரில் கடத்தி வரப்பட்ட 183 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் கடத்தி வரப்பட்ட 183 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர்
கரூர் மாவட்டம், மாயனூர் போலீசார் மாயனூர் கதவணை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர் . அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 183 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 168 ஆகும். இதனையடுத்து புகையிலை பொருட்களையும், போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக கார் டிரைவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர் மலையை சேர்ந்த ரமேஷ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட மாயனூர் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.
Related Tags :
Next Story