எருது விடும் விழாவில் மாடு முட்டி 19 பேர் காயம்


எருது விடும் விழாவில் மாடு முட்டி 19 பேர் காயம்
x

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 19 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 19 பேர் காயமடைந்தனர்.

எருது விடும் விழா

கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி கருணாநிதி, தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, முன்னாள் தலைவர் அழகேசன் ஊர் நாட்டாமை பழனி, மணி, வினோத்குமார் முன்னிலை வகித்தனர்.

எருது விடும் திருவிழாவை எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க.தேவராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆர ராஜசேகர் வரவேற்றார். வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

19 பேர் காயம்

வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த கைகளை வைத்து தட்டினார்கள். அப்போது காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 111, இரண்டாவது பரிசாக ரூ.70 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.60 ஆயிரம் என 51 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மின்விசிறி, சில்வர் குடம் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டது. முடிவில் சதீஷ்குமார், வீரராகவன் நன்றி கூறினார்கள். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞரணியினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story