79 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


79 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில்   நலத்திட்ட உதவிகள்
x

கீழையூர் அருகே ஏர்வைகாடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 79 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் அருகே ஏர்வைகாடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 79 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

மக்கள் நேர்கணல் முகாம்

நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமத்தில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலெக்டர் அருண்தம்புராஜ், 79 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 8 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குறைகள் நிவர்த்தி

மாவட்டத்தில் மாதம் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது.

இந்த ஊராட்சியில் உள்ள ஏர்வைக்காடு கிராமத்தில் காவேரி கோட்டம் ஆற்றில் பாலம் கட்டுதல், சாலை அமைக்கவும், ஏர்வைக்காடு முதல் ராமன் கோட்டம் மற்றும் மரபள்ளம் வரை ஓரடுக்கு சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தனபாலன், பழனியப்பன், கலைசெழியன், திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார்,

கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார் வெற்றிச்செல்வன் மற்றும்் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story