சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 19 பேர் காயம்


சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 19 பேர் காயம்
x

சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மகாதேவி, காருகுடி, மோருப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 19 பேர் ஒரு சரக்கு வேனில் துறையூர் அருகே ஆதனூர் கிராமத்திற்கு துக்க காரியத்திற்காக தா.பேட்டை வழியாக சென்றுள்ளனர். மேட்டுப்பாளையம் - தா.பேட்டை செல்லும் சாலையில் தனியார் செங்கல்சூளை அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன், சாலையோரத்தில் கவிழ்ந்தது.இதில் சரக்கு வேனில் சென்ற12 பெண்கள் உள்பட மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசிச்சை பெற்றனர். இதில் பலத்த காயம் அடைந்த பவானி, சுப்பிரமணி ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story