சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது
x

சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மேலும் நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ., அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்ததை கண்டித்தும் பெரம்பலூர் காமராஜர் வளைவில் நேற்று மதியம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சையது அபுதாஹிர் உள்பட 7 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால் உள்பட 12 பேரை மங்களமேடு போலீசார் கைது செய்து அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story