192 மதுபாட்டில்கள் பறிமுதல்


192 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

192 மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுரை

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக சூர்யா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒருவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடி விட்டார். போலீசார் அந்த இடத்துக்கு சென்று பார்த்த போது அந்தப் பகுதியில் 192 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார், தப்பி ஓடிய உசிலம்பட்டி தாலுகா கன்னியம்பட்டியை சேர்ந்த தங்கம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story