8-வது நாளாக குறைவு தமிழகத்தில் 1,945 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 1,945 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் தொடர்ந்து 8-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேற்று புதிதாக 34 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,118 பேரும், பெண்கள் 827 பேரும் என 1,945 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 419 பேர், செங்கல்பட்டில் 207 பேர், கோவையில் 179 பேர், திருவள்ளூரில் 86 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
அதில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 83 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 292 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 15 ஆயிரத்து 409 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 43 பேரும், செங்கல்பட்டில் 1,801 பேரும், கோவையில் 1,232 பேரும், சேலத்தில் 534 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் 751 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 379 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 78 ஆயிரத்து 902 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.