உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம்


உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம்
x

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடக்கிறது.

கிராம சபை கூட்டம்

நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து கண்காட்சிகள் நடத்தப்படும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும்.

மண்டல அலுவலர்கள் நியமனம்

உள்ளாட்சி தினத்தினை கொண்டாடும் விதமாக சிறப்பாக செயலாற்றிய பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட பசுமை மற்றும் நீர் நிலைகளை பாதுகாத்து, அந்த ஊராட்சியின் வருவாயை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வழியில் பயன்படுத்திய கிராம ஊராட்சி தலைவர்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், மற்றும் கருத்து பட்டறைகள் நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவனம் மண்டல பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இந்த கிராம சபை கூட்டங்களில் அனைத்து நிலை தாசில்தார்களும் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



Next Story