குடியரசு தின விழாவில் பங்கேற்ற காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு


குடியரசு தின விழாவில் பங்கேற்ற காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
x

குடியரசு தின விழாவில் பங்கேற்ற காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

சென்னை,

நாட்டின் 74-வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் பல்வேறு துறைகள் சார்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது.

இதில் கல்லூரி அளவில் ராணிமேரி கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசும், பள்ளி அளவில் அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு முதல் பரிசும் பெற்றுள்ளது.

அலங்கார ஊர்தி அணிவகுப்பில் காவல் துறை முதல் பரிசையும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை 2-வது பரிசையும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை 3-வது பரிசையும் பெற்றுள்ளன.

கவர்னர் மாளிகையில் மாலையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் இதற்கான பரிசுகளை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் இருந்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு, இயக்குனர் ஆபாஷ்குமார், இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.

ககன்தீப் சிங் பேடிக்கு பரிசு

கொடிநாள் வசூலில் அதிக வசூல் செய்த சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதிக்கு முதல் பரிசும், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஜான் ஆல்பின் வர்கீஸ் 2-வது பரிசும், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 3-வது பரிசையும் கவர்னர் வழங்கினார்.

மாநகராட்சி அளவில் அதிக வசூல் செய்ததற்காக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடிக்கு முதல் பரிசும், 2-வதாக கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்புக்கு 2-வது பரிசையும் கவர்னர் வழங்கினார். சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணியில் சிறப்பாக செயல்பட்ட வனிதா மோகன் மற்றும் சமூகப்பணிகளில் சிறந்த விழங்கிய ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

முன்னதாக 'பாரதி கண்ட பாரதம்' என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


Next Story