கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது


கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
x

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே மருதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகக்கனி (வயது 29). இவர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு, கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகக்கனியை கைது செய்து பிடியாணையை நிறைவேற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பத்தமடை அருகே மேலச்சடையமான்குளம் பகுதியில் கடந்த 2021-ம் வருடம் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் மேலச்சடையமான்குளம் சர்ச் தெருவை சேர்ந்த ராஜாசிங் (52) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார். இதனால் கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை பத்தமடை போலீசார் கைது செய்து கோாட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story