தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்


தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்
x

தியாகதுருகம் அருகே தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு எரிந்து நாசமானது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே சிறுவல் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 41). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிர் சாகுபடி செய்து பராமரித்து வந்தார். கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று மாலை திடீரென கரும்புகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story