அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை பொள்ளாச்சியை சேர்ந்த ராஜன்(வயது 52)் ஓட்டி வந்தார். பல்லடம் பனப்பாளையம் ேசாதனை சாவடியில் வந்த போது அந்த பஸ் நிறுத்தத்தில் திருப்பூர் செல்ல 2 வாலிபர்கள் பஸ்சுக்கு காத்திருந்தனர். அங்கு வந்த இந்த பஸ்சை நிறுத்தச்சொல்லி கைகாட்டினர். அந்த பஸ் இடைநில்லா பஸ் என்பதால் நிற்காமல் வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தங்களுடைய மோட்டார்சைக்கிளில் ராயர்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதை அந்த வழியே சென்ற அரசு பஸ்டிரைவர்கள் பார்த்து பஸ்களை நிறுத்தி டிரைவருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பஸ்டிரைவர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் பண்ருட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி(29), விருத்தாச்சலத்தை சேர்ந்த உதயசந்திரன்(25)என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.