சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது


சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
x

சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை ெசய்தனர். அப்போது காரில் பிளாஸ்டிக் பைகளில் 380 லிட்டர் அளவில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த டிரைவர் காரைக்கால் சிவன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தினேஷ்குமார் (வயது26), மற்றொருவர் திருவாரூர் மாவட்டம் பூங்காவூர் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் விவேக் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் தினேஷ்குமார், விவேக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story