2 பேர் கைது
ஒயர் திருடிய 2 பேர் கைது
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி நகரப்பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வினியோக பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்காக டிரான்ஸ்பார்மர்கள் உடன்குடி மின் நிலைய பணியாளர் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.
உடன்குடி உப மின் நிலைய உதவி பொறியாளர் மகாலிங்கம் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஆய்வு செய்தபோது இருந்துள்ளது. ஜூன் மாதம் 4-ந்தேதி மீண்டும் ஆய்வுசெய்த போது அங்கிருந்த 4 மின்மாற்றிகளில் இருந்த காப்பர், காயல் மற்றும் ஆயில் மின்மாற்றிகள் கழற்றப்பட்டு திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக தூத்துக்குடி மடத்தூர் துரைகனி நாராயணன் மகன் மாரிசெல்வன் (வயது 32), தூத்துக்குடி ஆவுடையார்புரம் மாரியப்பன் மகன் மதன்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர். 240 கிலோ காப்பர் ஒயரை கைப்பற்றி மீட்டுள்ளார். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தையும் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.