வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது


வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
x

வீரவநல்லூர் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் புதுக்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் (22), ஆஞ்சநேயர் (19) ஆகியோர் மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிகேட்ட மாரியப்பனை அவர்கள் அவதூறாக பேசி, கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மாரியப்பனின் வீட்டுக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாரியப்பனின் தந்தை பெருமாள் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிவசங்கர், ஆஞ்சநேயர் ஆகியோரை நேற்று கைது செய்தார்.


Next Story