பார் உரிமையாளரை தாக்கி மாமூல் கேட்ட 2 பேர் கைது


பார் உரிமையாளரை தாக்கி மாமூல் கேட்ட 2 பேர் கைது
x

திண்டிவனத்தில் பார் உரிமையாளரை தாக்கி மாமூல் கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 42). இவர் திண்டிவனத்தில் மது பார் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பாரில் இருந்த இவரிடம் திண்டிவனம் கிடங்கல் - 2 ராஜன் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் அஜய் ராஜ் (22), சின்ன வீரராகவன் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் சரத் (30) ஆகியோர் மாமூல் கேட்டு இரும்பு குழாயால் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story